மாஸ் வீடியோ... 1 BHK வீட்டில் பயணித்த அனுபவம்... ஊபர் காரில் தட்டு, குளிர்பானம் , ஸ்னாக்ஸ், பொம்மைகள்!

ஊபர் காரை அப்துல் காதர் பயணிகளின் வசதிக்காக சிறப்பாக வடிவமைத்திருந்தார். அதில் முன் இருக்கைகளின் பின்னே தட்டுகள், ஹோல்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கேயே குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள், சிப்ஸ் போன்ற ஸ்னாக்ஸ் வகைகள், பொம்மைகள், மூலிகை மருந்துகள் என அனைத்து வசதிகளும் இலவசமாக பயணிகளுக்கு வழங்கப்பட்டன.
Literally traveling in a 1bhk today. Hands down the coolest Uber ride ever! pic.twitter.com/O3cHSF30o2
— Akaanksha Shenoy (@shennoying) April 25, 2025
குப்பைகளை போடுவதற்கு சிறிய குப்பை தொட்டியும் காரில் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பயணிகள் தங்களது ஃபீட்பேக் தெரிவிப்பதற்காக ஒரு டைரியையும் வைத்துள்ளார். இந்த சிறப்பான சேவையை காரில் பயணித்த பெண் ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அந்த பெண் “உண்மையில் ஒரு 1BHK வீட்டில் பயணிப்பது போல உணர்கிறேன்” என்றும், “இதுவரை பார்த்த மிக சிறந்த ஊபர் ரைடு” எனவும் பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவு வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் ஊபரின் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் அதற்கு எதிர்ப்பையும் பதிவிட்டு வருகின்றனர். இதில் எத்தனை இனிமையான அனுபவமும், அதே நேரத்தில் பாதுகாப்பு அச்சங்களும் உள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஊபர் பயணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!