ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை... ரிக்டர் 6.7 ஆகப் பதிவு!
ஜப்பானின் ஹொன்சு தீவுப் பகுதியில் இன்று (டிசம்பர் 12) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஹொன்சு தீவில் உள்ள குஜி நகரில் இருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தின் காரணமாகக் கட்டிடங்கள் கடுமையாக அதிர்ந்தன. இதனால் அச்சமடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பான் அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த திங்கட்கிழமை ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 50 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்களால் ஜப்பானிய மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
