இன்று மிஸ் பண்ணாதீங்க... 20,000 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன.
சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் நாள் : 29.03.2025 சனிக்கிழமை
நேரம் : காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
இடம் : நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகம்
பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் பணியிடங்கள்:
இதில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மொத்தப் பணியிடங்கள் : 20,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
இலவச சேவைகள் மற்றும் பயிற்சிகள்:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வழங்கும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் முகாமில் வழங்கப்படும்.
தகுதிகள்:
8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதி உள்ளவர்கள். ITI, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்களும் இந்த முகாமில் இலவசமாக பங்கேற்று பயனடையலாம்.
முன்பதிவிற்கான இணையதளம்:
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் நபர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login பகுதியில் தங்களது சுயவிபரங்களை முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!