சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து... தரைமட்டமான கட்டிடம்!

 
பட்டாசு வெடிவிபத்து

உயிரை கைகளில் பிடித்தப்படி தான் சிவகாசி மாவட்டத்தில் தொழிலாளர்கள் வேலைப் பார்த்து வருகின்றனர். சமீபமாக பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டும் தமிழக அரசு, இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்காமல், நிவாரண தொகை அறிவிப்பதோடு, தன்னுடைய கடமை முடிந்து விடுவதாக இருந்து வரும் போக்குக்கு பொதுமக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆலையில் இருந்த மருந்து தயாரிக்கும் அறை முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஓ.மேட்டுப்பட்டி பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை மாவட்ட வருவாய்  துறையில் முறையான அனுமதி பெற்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

பட்டாசு ஆலை விபத்து

இந்த பட்டாசு ஆலையில் மொத்தம் 10 அறைகள் வரை உள்ளன. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை மருந்து தயாரிக்கும் ஒரு அறையில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளிவந்தது. இதைப் பார்த்த தொழிற்சாலைக்கு வந்த தொழிலாளர்கள் உள்பட அனைவரும் அவசர, அவசரமாக வெளியேறினர். அடுத்த ஒருசில விநாடிகளில் அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

பட்டாசு ஆலை விபத்து

தொழிலாளர்கள் பணிகளை தொடங்கு முன்பாக விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதமும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறை வீரர்கள், தீயை அணைத்தனர்.

இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து எம். புதுப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகை முடிந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் இந்த ஆலையில் பட்டாசு உற்பத்தி துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web