பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயங்கர தீ: சென்னை முழுவதும் சேவைகள் முடக்கம்!
சென்னை அண்ணாசாலையில் கேசினோ திரையரங்கம் எதிரே உள்ள பிஎஸ்என்எல் 7 மாடி கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மத்திய மண்டல அலுவலகமாக செயல்பட்டு வரும் இந்த பகுதியில் தீ வேகமாக பரவி, அலுவலகத்தில் இருந்த மின்சாதனங்கள் முழுவதும் கருகின. ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் ஸ்கை லிப்ட் ராட்சத இயந்திரம் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எழும்பூர், வேப்பேரி, திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், சேப்பாக்கம் உள்ளிட்ட பல நிலையங்களில் இருந்து தீயணைப்புக் குழுக்கள் வரவழைக்கப்பட்டன. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த தீ விபத்து காரணமாக சென்னையில் பிஎஸ்என்எல் லேண்ட்லைன், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளிலும் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. தீ விபத்து குறித்து சிந்தாதரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
