குஜராத் சூரத் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து - ஜவுளிப் பொருட்கள் எரிந்து நாசம்!
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பர்வதிபாட்யா என்ற பகுதியில் அமைந்திருந்த 7 மாடிகளைக் கொண்ட வணிக வளாகத்தில் இன்று அதிகாலை திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், கட்டிடத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் அதில் வைக்கப்பட்டிருந்த ஜவுளிப் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

சூரத், பர்வதிபாட்யா பகுதியில் உள்ள 7 மாடி வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரைத்தளத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ, மளமளவென மற்ற தளங்களுக்கும், குறிப்பாக 3-வது மற்றும் 5-வது தளங்களுக்கும் வேகமாகப் பரவியது. தீ விபத்து குறித்துத் தகவலறிந்து, 22 தீயணைப்பு வாகனங்களில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 4 மணி நேரம் போராடி அவர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த வணிக வளாகத்தில் இயங்கி வந்த 20-க்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள், கிடங்குகள் மற்றும் சிந்தெட்டிக் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. கட்டிடத்தின் லிஃப்ட் வயரிங்கில் ஏற்பட்ட சிறிய தீயால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. விபத்து அதிகாலை நேரத்தில் நடந்ததால், கட்டிடத்தில் ஊழியர்கள் யாரும் இல்லை. இதன் காரணமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
