35மாடி அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் தீ விபத்து... பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு!
ஆசியாவில் உள்ள ஹாங்காங் நாட்டில் நடைபெற்ற பெரும் தீ விபத்து உலக கவனத்தை ஈர்த்துள்ளது. தாய் பொ நகரின் வாங் பெக் கோர்ட்டு காம்ப்ளெக்ஸ் பகுதியில் 1984 வீடுகளைக் கொண்ட 35-மாடி குடியிருப்பில் நேற்று மாலை 3 மணியளவில் தீ பரவியது. சுமார் 5 ஆயிரம் பேர் வசித்த இந்த கட்டிடத்தில் நடந்து வந்த கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்பட்ட மர அமைப்புகள் காரணமாக தீ வேகமாக பல தளங்களுக்கு பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருகிலிருந்த பிற அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் நெருப்பு பரவியதால் நிலைமை மேலும் மோசமடைந்தது. தொடக்கத்தில் 94 ஆக இருந்த உயிரிழப்புகள் தற்போது 128 ஆக உயர்ந்துள்ளன. தப்பிக்க முடியாமல் பலர் உள்ளே சிக்கியதாக கூறப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

இந்த விபத்தில் 79 பேர் தீவிர காயமடைந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக அச்சுறுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அடுக்குமாடி கட்டடத்தில் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் நடவடிக்கையுடன் மீட்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
