ஓஎன்ஜிசி கிணற்றில் 2 வது நாளாக பற்றி எரியும் பெரும் தீ… மக்கள் வெளியேற்றம்!

 
ஓஎன்ஜிசி
 

ஆந்திர மாநிலம் கோணசீமா மாவட்டம் ரசோல் அருகே இருசுமண்டா கிராமத்தில் உள்ள ஓஎன்ஜிசி எண்ணெய் கிணற்றில் நேற்று திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டது. கச்சா எண்ணெய் கலந்த இயற்கை எரிவாயு பலத்த சத்தத்துடன் வெளியேறி, சில நிமிடங்களில் தீப்பற்றியது. கரும்புகை சூழ்ந்து பகுதி முழுவதும் பனிமூட்டம் போல காட்சியளித்தது. அருகிலிருந்த சுமார் 500 தென்னை மரங்கள் எரிந்து சாம்பலானது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கிணற்றில், சீரமைப்பு பணிகள் நடைபெறும்போது இந்த விபத்து ஏற்பட்டது. உடனடியாக மாவட்ட நிர்வாகமும் ஓஎன்ஜிசி அதிகாரிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 5 கி.மீ சுற்றளவில் உள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அடுப்பு எரிக்க வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஓஎன்ஜிசி

இந்த நிலையில் இரண்டாவது நாளாகவும் கிணற்றில் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர். எரிவாயு கசிவை கட்டுப்படுத்த சர்வதேச நிபுணர்களின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. 600 மீட்டர் சுற்றளவில் வீடுகள் இல்லாததால் உயிர்ச்சேதம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!