ஏப்ரல் 12 முதல் தீப்பெட்டி ஆலைகள் மூடல்... மூலப்பொருட்கள் விலை உயர்வால் திடீர் அறிவிப்பு!

 
தீப்பெட்டி தீப்பெட்டி

தமிழகத்தின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் தீப்பெட்டித் தொழில், தற்போது வரலாறு காணாத நெருக்கடியைச் சந்தித்துள்ளது. விருதுநகர், சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 400-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட பேக்கிங் யூனிட்கள் வரும் ஏப்ரல் 12-ம் தேதி முதல் ஏப்ரல் 25-ம் தேதி வரை மூடப்படவுள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்தத் திடீர் முடிவுக்குக் சர்வதேச அளவில் நிலவும் போர்ச் சூழலே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதலால், ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மெழுகு , அட்டை மற்றும் பாலித்தீன் பைகளின் வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட மெழுகு, தற்போது 150 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது தவிர பாஸ்பரஸ், குளோரைடு மற்றும் காகிதம் போன்ற இதர மூலப்பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், உற்பத்திச் செலவை ஈடுகட்ட முடியாமல் உற்பத்தியாளர்கள் திணறி வருகின்றனர்.

இந்த 14 நாள் கதவடைப்பு போராட்டத்தால், இத்தொழிலை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பியுள்ள சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் (இதில் 90 சதவீதம் பேர் பெண்கள்) வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. "உற்பத்திச் செலவு ஒரு பண்டலுக்கு 40 முதல் 50 ரூபாய் வரை அதிகரித்துள்ள நிலையில், சந்தையில் தீப்பெட்டி விலையை உயர்த்த முடியாத சூழல் நிலவுகிறது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு மூலப்பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் மா. பரமசிவம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வேலைநிறுத்தத்தால் நாளொன்றுக்குச் சுமார் 6 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!