குட் நியூஸ்... செவிலியர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு... !
தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நிரந்தரப் பணியாளர்களைப் போலவே இவ்வசதி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு ஒப்பந்த செவிலியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தம் 186 நாட்கள், அதாவது 6 மாதங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் தொடர் கோரிக்கைகளை ஏற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும், முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
