மாட்டுப் பொங்கல்.. பிரதோஷமும் இணைந்த அபூர்வ நாள்... பொங்கலிடவும், படையல் போடவும் நல்ல நேரம் எது?
இன்று அதிகாலை சூரிய உதயத்தின் போது (6:15 - 6:45 மணிக்குள்) பொங்கல் வைப்பது விசேஷம் என்றாலும், இல்லங்களில் மாட்டுப் பொங்கல் வைக்கவும், முன்னோர்களுக்குப் படையலிடவும் காலை 9:10 மணி முதல் 10:20 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் 1:30 மணி வரையிலும், அதன் பின்னர் மாலை: 6 மணிக்கு மேல் நல்ல நேரமாக கணிக்கப்பட்டுள்ளது. மாலை படையலுக்கு நேரக் கணக்கு கிடையாது.
மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி, மாலை அணிவித்து அழகுபடுத்த வேண்டும். மாட்டுத் தொழுவத்தைச் சுத்தம் செய்து கோலமிட்டு, அங்கேயே பொங்கலிட்டு மாடுகளுக்குச் சர்க்கரை பொங்கல், வெல்லம் கலந்த அரிசி மற்றும் வாழைப்பழங்களைக் கொடுத்து வழிபட வேண்டும்.

வீட்டில் மாடு இல்லாதவர்களும் இன்று முன்னோர்களை வழிபடலாம். அவர்களுக்குப் பிடித்த உணவுகள் மற்றும் புத்தாடைகளை வைத்துப் படையலிட்டு வணங்குவது லட்சுமி கடாட்சத்தைத் தரும். இன்று குறைந்தபட்சம் இரண்டு பேருக்காவது அன்னதானம் செய்வதும், கோசாலைக்குச் சென்று மாடுகளுக்கு அகத்திக் கீரை அல்லது புல் வழங்குவதும் பெரும் புண்ணியத்தைத் தரும்.

இந்த ஆண்டு மாட்டுப் பொங்கல், மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை மற்றும் சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷம் ஆகியவற்றுடன் இணைந்து வருகிறது. மாலையில் சிவாலயங்களுக்குச் சென்று நந்தி பகவானுக்கு அருகம்புல் சாற்றி, விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. நந்தி பகவான் 108 போற்றி துதிகளைச் சொல்லி வழிபடுவதன் மூலம் சிவபெருமானின் அருளையும் நந்தியின் அருளையும் முழுமையாகப் பெறலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
