16 வகையான சோடச உபசாரத்துடன் நந்திக்கு மாட்டு பொங்கல் ... தஞ்சை பெரியகோவிலில் கோலாகலம்!

 
நந்தி
 

தஞ்சாவூர் பெரியகோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு மஹாநந்திக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இரண்டு டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் நந்தியெம்பெருமானுக்கு அழகிய அலங்காரம் செய்யப்பட்டது. கத்திரிக்காய், வெண்டைக்காய், பூசணிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டன.

நந்தி

அலங்கரிக்கப்பட்ட மஹாநந்திக்கு 16 வகையான சோடச உபசார தீபாராதனைகள் நடைபெற்றன. ஆப்பிள், ஆரஞ்சு, வாழை, மலர்கள், இனிப்புகள் கொண்டு நந்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு அலங்காரம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

அதிகார நந்தி கபாலீஸ்வரர் மயிலாப்பூர் மயிலை

இதனைத் தொடர்ந்து 108 பசுமாடுகளுக்கு கோ-பூஜை நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி, வேஷ்டி, சேலை அணிவிக்கப்பட்டது. மாடுகளுக்கு வாழைப்பழம், பொங்கல் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!