'மெக்ஸ்டீமி' புகழ் நடிகர் எரிக் டேன் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!

 
'மெக்ஸ்டீமி' புகழ் எரிக் டேன்

கிரேஸ் அனாடமி' (Grey's Anatomy) தொடரில் டாக்டர் மார்க் ஸ்லோன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் உலகப்புகழ் பெற்ற அமெரிக்க நடிகர் எரிக் டேன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 53.  எரிக் டேன் நேற்று பிப்ரவரி 19 மாலை மருத்துவமனையில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

எரிக் டேன் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமக்கு 'அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ்' (ALS) எனும் நரம்பியல் பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தினார். தசைகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளைப் பாதிக்கும் இந்தத் தீராத நோயுடன் ஓராண்டு காலம் போராடி வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் மறையும் தருணத்தில் அவரது மனைவி ரெபெக்கா கெய்ஹார்ட் மற்றும் மகள்கள் பில்லி, ஜார்ஜியா ஆகியோர் உடனிருந்தனர்.

'மெக்ஸ்டீமி' புகழ் எரிக் டேன்

தனது இறுதி நாட்களில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வதில் அவர் தீவிரமாகச் செயல்பட்டார். இதற்காக அவருக்குப் பல விருதுகளும் கௌரவங்களும் வழங்கப்பட்டன. 'கிரேஸ் அனாடமி' தொடரில் இவர் நடித்த பிளாஸ்டிக் சர்ஜன் கதாபாத்திரம் இவருக்குப் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது.

'மெக்ஸ்டீமி' புகழ் எரிக் டேன்

'யூபோரியா' (Euphoria) தொடரில் கால் ஜேக்கப்ஸ் கதாபாத்திரத்திலும், 'தி லாஸ்ட் ஷிப்' (The Last Ship) தொடரிலும் இவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. மேலும், 'X-Men: The Last Stand', 'Marley & Me' போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!