மாஸ்கோவில் மே 9 வெற்றி தின அணிவகுப்பு... பிரதமர் மோடி பங்கேற்க ரஷ்யா அழைப்பு!

மாஸ்கோவில் மே 9ம் தேதி வெற்றி தினம் அணிவகுப்பு கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.
மே 9, 1945 அன்று இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மே 9 அன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற உள்ளது.
ஜெர்மனி, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியனிடம் சரணடைந்ததை நினைவுகூரும் வகையிலான இந்த வெற்றி தின அணிவகுப்பு, ரஷ்யாவின் மிக முக்கியமான வருடாந்திர கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.
இந்நிலையில் இந்த அணிவகுப்புக்கு அழைப்புக் கடிதத்தை இந்திய பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. மேலும் பிற நட்பு நாடுகளுக்கும் அழைப்புக் கடிதம் பறந்துள்ளது. பிரதமர் மோடி கடைசியாக 22வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டுக்காக ஜூலை 2024 இல் ரஷ்யாவிற்கு விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!