இனியாவது அவள் சந்தோஷமாக இருக்கட்டும்... தந்தை முன்னிலையில் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!

 
இனியாவது அவள் சந்தோஷமாக இருக்கட்டும்... தந்தை முன்னிலையில் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்! 


 

உத்திரப்பிரதேச மாநிலம் அமேதியில் தாரியாவ் கிராமத்தில் வசித்து வருபவர்  சதாய் . இவரது  மனைவி சீமா மற்றும் அவரது காதலன் சிவானந்திற்கு நீதிமன்றத்தில் நேரடியாக திருமணம் செய்து வைத்துள்ளார். மனைவியின் காதல் விவகாரம் தெரிந்ததும் சண்டையோ அல்லது வழக்கோ இல்லை. அதற்கான நிரந்தர   தீர்வாக திருமணம் நடத்தி வைத்திருப்பது சமூகத்தில் பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
சதாய் மற்றும் சீமா இருவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.  திருமணத்திற்கு முன்பே சீமாவுக்கு சிவானந்த் என்ற நபருடன் காதல் இருந்தது. இந்த காதல் தொடர்பு திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து  வந்தது.

ஒரு வாரத்திற்கு முன்பு தனது மனைவியை அந்த காதலனுடன் கண்ட சதாய், தனது மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற  முடிவு செய்தார். இதையடுத்து  புதன்கிழமை நீதிமன்றத்தில் நேரடியாக திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் முக்கியமாக சீமாவின் தந்தை ராம் பிரசாத் தனது மகளின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். “எங்கள் மகள் தான் நேசித்த நபருடன் வாழ விரும்புகிறாள். இது அவரது வாழ்க்கை, அதனால் எங்களுக்குத் திருப்தியே” எனத் தெரிவித்தார்.  அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிகிறது.  சிவானந்த் மற்றும் சீமா தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.
மனைவியின் திருமணத்திற்கு பிறகு, கணவர் சதாய்  13 ஆண்டுகளுக்கு முன்பு ஏழு ஜென்மங்கள் ஒன்றாக வாழ சபதம் செய்திருந்தோம். ஆனால், இன்று அவள் மனம் வேறு ஒருவரிடம் இருக்கிறது. நான் அவளை கட்டாயப்படுத்த முடியாது என்பதற்காகவே, அவள் விருப்பப்படி திருமணம் செய்து வைத்தேன். இனிமேல் அவள் சுதந்திரமாக இருக்கட்டும்” என உருக்கமாக கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது