மும்பையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் மேயர்!
மகாராஷ்டிரம் மாநிலத்தின் மும்பையை கைப்பற்ற பாஜக நீண்டகாலமாக போராடி வருகிறது. கடந்த மாதம் மும்பை உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக மாறியது. ஆனால் கூட்டணிக் கட்சி சிவசேனை 29 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதன் பின்னர், மும்பை மேயர் பதவிக்கு போட்டி உருவானது. இதற்கிடையில் பாஜக 132-வது வார்டு உறுப்பினர் ரிது தாவ்டேவை மும்பை மேயர் வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல் பிப்ரவரி 11 அன்று நடைபெறும். இதன் மூலம், 1997 முதல் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக சிவசேனை அல்லாத ஒருவர் மும்பை மேயராக பதவியேற்கவுள்ளார்.
துணை மேயர் பதவிக்கு சிவசேனை சஞ்சய் காதியை அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் துணை மேயர் அடுத்த 15 மாதங்களுக்கு மட்டுமே பதவி வகிப்பார். இதனால் 5 ஆண்டுகளில் 4 பேருக்கு துணை மேயர் பதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
