இன்றே கடைசி... எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்களுக்கு விண்ணப்பிக்க மாலை 5 மணியுடன் கால அவகாசம் நிறைவு!

 
எம்பிபிஎஸ்
 

தமிழகம் முழுவதும்  36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில்   5200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு விடுகிறது. இது தவிர தனியார் கல்லூரிகளில் 3450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு உள்ளன. 

எம்பிபிஎஸ், பிடிஎஸ்
தமிழகத்தை பொறுத்தவரை மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9200 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.  பி.டி.எஸ். படிப்புகளுக்கு  அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 1900 இடங்களும் உள்ளன. இந்நிலையில்  எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு  ஜூன் 5ம் தேதி முதல் தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற்றது. 

எம்பிபிஎஸ்

மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், நீட்டிக்கப்பட்ட காலஅவகாசம் இன்று  ஜூன் 29ம் தேதியுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது.  இதனையடுத்து எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்கள் கடைசி நேர பதற்றத்தை தணிக்க, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் https://tnmedicalselection.net என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம் என மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது