மத்திய அரசுக்கு இசை ஞானம் கிடையாது... மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம்!

 
வைகோ

 இசைஞானி இளையராஜா லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்து வெற்றிகரமாக திரும்பியுள்ளார். தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்து  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்த இசைஞானி இளையராஜாவை சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் .  

வைகோ

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “இசைஞானி இளையராஜா லண்டன் சென்று சிம்பொனியை நடத்தினார். யாராலும் செய்ய முடியாத சாதனையை நம் தமிழகத்தின் இசைஞானி இளையராஜா சாதித்து காட்டி இருக்கிறார்.  இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் நான் அவரை பாராட்டி பேசியதற்கு ரஜினிகாந்த் எழுந்து விசில் அடிக்க ஆரம்பித்தார். 

வைகோ
 
தமிழரின் பெருமையை வட நாட்டினர் அறியாதவர் என்பதற்கு உதாரணம் இளையராஜாவின் சிம்பொனி இசையை கொண்டாடாமல் இருப்பதே சரியான  உதாரணம். இந்தியாவில் அவரின் சிம்பொனி இசை பற்றி வட மாநிலங்களில் தெரிய வேண்டும். இளையராஜவை தமிழ்நாடு அரசு வரவேற்றது, போல் டெல்லியில் இருந்து அவரை வரவேற்று புகழ் கொடுத்திருக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு இசை ஞானம் கிடையாது” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web