ஹரியாணா ராட்டின விபத்தில் பலியான காவல் ஆய்வாளர் பதக்கம் பெற்றவர்… ஓய்வுக்கு முன் சோக முடிவு!

 
ஹரியானா
 

ஹரியாணா மாநிலம் சூரஜ்குன்ட் கண்காட்சியில் ராட்சத ராட்டினம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் பலியான காவல் ஆய்வாளர் ஜகதீஷ் பிரசாத் (58), 2020 ஆம் ஆண்டு காவலர் பதக்கம் பெற்றவர் என தெரியவந்துள்ளது. 1989 ஆம் ஆண்டு ஹரியாணா ஆயுதப்படையில் சேர்ந்த அவர், 36 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி வந்தார். வருகிற மார்ச் மாதத்தில் ஓய்வு பெற இருந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா

இந்த விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்தனர். அவர்களின் நிலை தற்போது ஆபத்திலிருந்து மீண்டுள்ளதாக சுற்றுலா அமைச்சர் அரவிந்த் சர்மா தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை சுமார் 15 பேர் இருந்தபோது ராட்டினம் திடீரென சரிந்ததாக போலீஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

ஹரியானா

இந்த நிலையில் பலியான ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவும் வழங்கப்படும் என மாநில டிஜிபி அஜய் சிங்கால் அறிவித்துள்ளார். தகவல் கிடைத்ததும் மாவட்ட துணை ஆணையர் ஆயுஷ் சின்ஹா மற்றும் சுற்றுலா மேலாண்மை இயக்குனர் பார்த் குப்தா சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!