நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மெகா மருத்துவ முகாம்கள்...!

 
மருத்துவ முகாம்

தமிழகத்தில் குமரிக்கடலில் உருவான கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்தது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பேருந்து ரயில் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன. மழை நீரில் பல்வேறு கிராமங்கள் தனித்தனி தீவுகளாய் உருமாறின. மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருந்தது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவ முகாம்

இது குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தென் மாவட்டங்களில் கனமழையால்  325 சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.    4 மாவட்டங்களில் 64 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 261 துணை சுகாதார நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்லையில் 13 சுகாதார நிலையங்கள், 13 துணை சுகாதார நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காய்ச்சல் முகாம்கள்

சுகாதார நிலையங்களில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆய்வறிக்கை  சமர்ப்பிக்கப்படும். அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும்   மேலும் டிசம்பர் 24ம் தேதி நாளை காலை 9 மணி முதல் 4 மணிவரை 50 இடங்களில் மெகா மருத்துவ முகாம்கள் நடைபெறும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து தூத்துக்குடியில் இந்த மருத்துவ முகாம்களை நடத்த உள்ளது. வெள்ளம் பாதித்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலமாகவும் மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இணைநோய் இருப்பவர்கள், முதியவர்கள், நோயாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்  அறிவுறுத்தியுள்ளார்.  

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web