கல்யாணமானவர் மேல் காதல்... தந்தை விஷம் கொடுத்து மருத்துவக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வர்ஷினி, சேலம் அருகே வாடகை அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறை வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை அதிகரித்தது. சம்பவ நாளில் தந்தை வரதராஜன் சேலத்திற்கு வந்து மகளை சந்தித்த பின்னர், மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததும் விசாரணையில் முக்கிய தகவலாக வெளிவந்தது.

வர்ஷினி, திருமணமான ஒரு நபருடன் பழகி வந்ததாகவும், அதை அறிந்த பெற்றோர் கடுமையாக எதிர்த்ததாகவும் தெரியவந்துள்ளது. படிப்பு முடிந்ததும் நல்ல திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் கூறினாலும், காதலிப்பவரையே திருமணம் செய்வேன் என மாணவி பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் தந்தை கோபமடைந்து, மகளை தாக்கி, செல்போனை பறித்து, அறையை வெளியே இருந்து பூட்டிவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலை நடந்ததா, அல்லது வேறு காரணமா என்பது போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்த பிறகே உறுதி செய்யப்படும் என போலீசார் கூறினர். தந்தை வரதராஜனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
