நாளை முதல் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
கலந்தாய்வு

தமிழகத்தில்  எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர  நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஜூலை 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், www.tnhealth.tn.gov.in  ன் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மே   7ம் தேதி இந்தியா முழுவதும் 499 நகரங்களில் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க, பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டது. பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே, தேர்வறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

கலந்தாய்வு
இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை ஜூன்13ம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்  என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை  பொறுத்தவரை  நீட் தேர்வை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் தேர்வு எழுதினர். அதில், 78693 பேர் இந்த ஆண்டு தகுதி பெற்றுள்ளனர். மேலும் தமிழகம், ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி  இருவரும் இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர். மேலும் முதல் 10 பேரில் 4 மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கலந்தாய்வு

விழுப்புரம் மாவட்டம் மேல்ஓலக்கூர் கிராமத்தில் வசித்து வரும்  பிரபஞ்சன் சென்னையில் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார்.    அவரது பெற்றோர் செஞ்சியில் அரசு பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். தனியார் பள்ளியில் படித்து வந்த இவர் முதல் முயற்சியிலேயே சாதனை படைத்துள்ளார். இதில் 720க்கு 720 மதிப்பெண்களை எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்து உள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web