டெலிவரி ஊழியர்களுக்கு மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு!
அமேசான், பிளிப்கார்ட், ஸ்விக்கி, சொமாட்டோ, செப்டோ உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களில் நாடு முழுவதும் 1.27 கோடி டெலிவரி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2029–30ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 2.35 கோடியாக உயரும் என நிடி ஆயோக் கணித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் தற்காலிக பணியாளர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் டெலிவரி ஊழியர்களுக்கான வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குறைந்தது 90 நாட்கள் பணியாற்றினால் மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம், பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றுவோர் ஆண்டுக்கு 120 நாட்கள் வேலை செய்திருந்தால் இந்த பலன்கள் கிடைக்கும்.

ஒரே நாளில் மூன்று நிறுவனங்களுக்கு வேலை செய்தால் அது மூன்று நாட்களாக கணக்கிடப்படும். இந்த பலன்களை பெற ‘இ-ஷ்ராம்’ இணையதளத்தில் பதிவு அவசியம். ஏப்ரலில் விதிகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக பாதுகாப்பு இல்லாததால் சமீபத்தில் 22 நகரங்களில் டெலிவரி ஊழியர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
