நீட் தேர்வே எழுதாம மெடிக்கல் சீட்... ? 16 லட்சத்தை ஆட்டைய போட்ட கும்பல்... !

 
நீட்

நீட் தேர்வே எழுதாம நான் மெடிக்கல் சீட் வாங்கி தரேன் என ஆங்காங்கே கும்பல்கள் கிளம்பியுள்ளன. இதனை நம்பாதீங்க மக்களே... படிச்சு தான் சீட் வாங்க முடியும் என பிள்ளைகளுக்கு அறிவுறுத்துங்கள்.இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்களுக்கு  நீட் தேர்வு அவசியம்.   இதனால் பல மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதனை ரத்து செய்யவும் மாநில அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.இதனை எதிர்கொள்ள முடியாமல் மாணவ மாணவிகளின் விபரீத முடிவுகளும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வு எழுதாமலேயே சீட் வாங்கித் தருவதாக ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலும் பரவலாகி வருகிறது.

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம் குறவன் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி கல்பனா. இவர்,  தனது மகள் சந்தியாவிற்கு எம்பி.பி.எஸ் சீட் வாங்கித் தர முயற்சித்துள்ளார்.  இந்த நிலையில் நீட் தேர்வு எழுதாமலேயே எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக ஒருவர் மூலம் அறிமுகமான பெங்களூருவைச் சேர்ந்த பிலிப்ஸ் சார்லஸ், அமுது, மோனிகா மற்றும் மார்க் ஆகியோர் ரமேஷிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

Tirupathur, Tirupathur : திருப்பத்தூர்: பாச்சல் கிராமத்தில் 18 வயது  கல்லுாரி மாணவி மாயம் - தந்தை ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் | Public  App

அவற்றை உண்மை என நம்பி நேரடியாகவும், அவர்கள் வழங்கிய வங்கி கணக்கிலும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பல்வேறு தவணையாக ரூ.16 லட்சத்து 35 ஆயிரத்து 796 ரூபாய் வழங்கியுள்ளார். ஆனால், அவர்கள் பணம் பெற்ற பிறகு ரமேஷ் உடனான தொடர்பை துண்டித்துள்ளனர். மேலும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமலும் இருந்துள்ளனர். இதனால் ரமேஷ் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்து தான் வழங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார்.

நீட் நுழைவுத்  தேர்வு

ஆனால் அவர்கள் இதுவரை ரூ.40 ஆயிரம் மட்டுமே திருப்பி கொடுத்துவிட்டு மீதம் பணத்தை தர  மறுத்துள்ளனர். இதுக்குறித்து ரமேஷ் ஜோலார்பேட்டை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் மோசடியில் ஈடுபட்ட பிலிப்ஸ் சார்லஸ்(வயது 43), மோனிகா(24), இருவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள அமுது மற்றும் மார்க் இருவரை தேடி வருகின்றனர்.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web