முதல்வர் மருந்தகங்களில் ரூ.27 லட்சத்திற்கு மருந்துகள் விற்பனை!

தமிழகத்தில் முதல்வர் மருந்தகங்களில் கடந்த 8 நாட்களில் ரூ.27 லட்சத்திற்கு மேல் மருந்துகள் விற்பனையாகி உள்ளதாகவும், இத்திட்டத்தால் 50,053 பேர் பயனடைந்து உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பல்வேறு மனிதநேயத் திட்டங்களில் மற்றும் ஒரு மாபெரும் வெற்றித் திட்டம் "முதல்வர் மருந்தகம்” திட்டம் 8 நாட்களில் ரூ.27 இலட்சத்திற்கு மேல் மருந்துகள் விற்பனை. ரூ.7 இலட்சத்து 68 ஆயிரத்து 766 ரூபாய் மக்களுக்கு சேமிப்பு! 50,053 பேர் பயனடைந்துள்ளனர்.
இந்த கடைகளில் வாங்கப்படும் மருந்துகளின் விலையில் 50 % முதல் 75 % வரை குறைந்த விலைக்கு வழங்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!