மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் காலமானார்!! முதல்வர், கனிமொழி இரங்கல்!!

 
கருமுத்து கண்ணன்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக இருந்தவர் கருமுத்து கண்ணன் . இவர் கடந்த 18 ஆண்டுகளாக மீனாட்சி அம்மன் கோவிலில் தக்காராகவும், மதுரை தியாகராஜா கல்லூரியில் தாளாளராகவும்  இருந்தவர். இவர் கடந்த சில நாட்களாகவே  உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தர். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



இவருடைய மறைவுக்கு  அரசியல் பிரபலங்கள், மக்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை  பதிவு செய்து வருகின்றனர்.   அந்த வகையில், தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  ” மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் தக்கார் கருமுத்து கண்ணன் அவர்கள் மறைந்த செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்” .  தொழில்துறை, கல்வித்துறை, கோயில் திருப்பணிகள் என அனைத்திலும் சிறந்து விளங்கி, பலருக்கும் உதவிகள் செய்த உயர்ந்த உள்ளம் கொண்ட கருமுத்து கண்ணன் அவர்களின் மறைவு பேரிழப்பு. அவரது மறைவினால் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.  


கருமுத்து கண்ணன் தியாகராஜர் மேலாண்மைக் கல்லூரி, கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி உட்பட பல  கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தவர்.  இவரது மறைவு குறித்து கனிமொழி எம்பி வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘கல்வியாளர் திரு. கருமுத்து கண்ணன் அவர்கள் மறைவெய்திய செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கல்வி, தொழில்துறை எனப் பல்துறைகளில் தனது சமூக வளர்ச்சிப் பணிகளால், மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றவர். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!