இன்று மீனாட்சி பட்டாபிஷேகம்!! கோலாகல கொண்டாட்டத்தில் தூங்கா நகரம்!!

 
பட்டாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.அந்த வகையில் நடப்பாண்டில் சித்திரை திருவிழா  ஏப்ரல்  23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.விழாவின் 7ம் நாளான நேற்று இரவு யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மனும், நந்திகேஸ்வரர் வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் எழுத்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மீனாட்சி பட்டாபிஷேகம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று ஏப்ரல் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இன்றைய தினம் இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் அம்மன் சன்னதியில் 6 கால்பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோல் வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும்.  

மீனாட்சி பட்டாபிஷேகம்

செங்கோல் கோவில் தக்கார் கண்ணனிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று சுவாமி சன்னதி 2ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் ஒப்படைப்பார். பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். கோவில் நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web