ஜூன் 24ல் 100 இடங்களில் தமிழகம் முழுவதும் மெகா மருத்துவ முகாம்!!

 
மெகா மருத்துவ முகாம்

தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  ஜூன் 24ம் தேதி சனிக்கிழமை நாளை மறுநாள்  100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று அறிவித்துள்ளார். இந்த மெகா மருத்துவ முகாமில் பொதுமக்கள் அனைத்து விதமான பரிசோதனைகளையும் செய்து கொள்ளலாம்  எனத் தெரிவித்துள்ளார்.இதில் பல் மருத்துவம், காச நோய் உட்பட அனைத்து  நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

 குறை தீர்க்கும் முகாம்
ஜூன் 21 புதன்கிழமை நேற்று காலை சென்னை காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது.   இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட  செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருந்து வருகிறது.  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி  அறுவை சிகிச்சைக்கு பின் நேற்று மாலை வேறு வார்டுக்கு மாற்றப்பட்டார்.  

செந்தில் பாலாஜி


அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில்  இதய  அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து 5 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அடுத்த  3 மணி நேரத்துக்கு செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருந்தார். அதன் பிறகு  செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web