குவியும் வாழ்த்துகள்... புஷ்பவனம் - அனிதாகுப்புசாமி மகள் மேஹா இசையமைப்பாளராக அறிமுகம்!

துருதுரு கண்கள், யாராவது தந்தையையோ, தாயையோ பார்க்க வந்தால், உடனே ஓடிச் சென்று திரைசீலைக்குப் பின்னால் ஒளிந்துக் கொள்ளும் குழந்தை என்று பல்லவிக்கு அப்படியே நேரெதிர் மேஹா.
அப்படி சின்ன வயசில் பார்த்தது. அதன் பின்னரான சந்திப்புகளில், ‘இதோ அடுப்புல வெச்சிருக்கேன்... ஒரு கிளறு கிளறி விட்டுட்டு வந்துடறேன்’ என்று பேட்டிக்கு ஊடாக எழுந்து சென்றுவிட்டு வருவார் புஷ்பவனம். உடனே அவர் பின்னாலேயே கிச்சனுக்கு ஓடுகிற குழந்தையாக மேஹாவை அறிந்திருந்தேன். இதே இப்போது கல்லூரி மாணவியாய், இசையமைப்பாளராய், பாடகியாக வளர்ந்து நிற்கிறார். தம் மக்கள் சான்றோன் என கேட்ட தம்பதி முகமெல்லாம் பூரிப்புடன் வருகிற வாழ்த்து பொக்கேக்களை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கார்ப்பரேட் செக்ரடேரியஷிப் பி.காம். படித்து வரும் 19 வயது மாணவியான மேஹாவுக்கு சிறு வயதில் இருந்தே இசை மீது ஆர்வம்.
நாட்டிப்புற பாடகர்களாக அறியப்பட்ட அனிதா, புஷ்பவனம் தம்பதியரின் மகள் என்கிற அடையாளத்தைத் தாண்டி, மேஹாவின் அப்பா போறாரு என்றோ, இன்னைக்கு சீப் கெஸ்ட் நம்ம மேஹாவின் அம்மா அனிதா குப்புசாமி என்றோ சொல்கிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நிஜமாக்குகிற கனவுகளோடு துள்ளல் இசைப் பாடல்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். மூத்த மகள் பல்லவி, மருத்துவரான நிலையில், கலைத்துறையில் சாதிக்கும் கனவுகளோடு அறிமுகமாகிறார் மேஹா.
“இவ நிஜமா பெரிய பாடகியாக வருவா சார். அத்தனை ஆர்வம்” என்று பல்லவியின் சிறுவயதுகளில் மடியில் அமர வைத்து, புஷ்பவனம் பாடியபடியே தாளம் இசைத்துக் கொண்டிருந்த காட்சிகள் கண்முன்னால் வந்து போகிறது.
சிறுவயது முதலே இசை, தன் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்ட மேஹாவுக்கு இயல்பிலேயே அது வாய்த்திருக்கிறது. கூடவே பெற்றோரின் வாழ்த்தும்.
கடவுள் இந்த குழந்தையை ஆசிர்வதித்த நிலையில், தமிழ் சீசன் 1ல் பாடகியாக அறிமுகமான மேஹா, தந்தை புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தியது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அதன் பின்னர், 'லவர்' படத்தில் "எழுத கதையோ" பாடலைப் பாடி கவனம் ஈர்த்தார். இப்போது இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் அறிமுகமாகும் முனைப்பில் உள்ளார்.
அவரது சகோதரருடன் இணைந்து உருவாக்கி இருக்கும் ‘கூத்தம்’ கவனம் ஈர்க்கிறது. இசையில் மிரட்சி தெரியவில்லை. தனது கனவுகளை கடை விரிக்கும் திட்டத்துடன் அத்தனை இயல்பாகவே வாய்த்திருக்கிறது மேஹாவுக்கு. பின்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் கூடியவிரைவில் மேஹாவின் பாடல்கள் ஒலிக்க கூடும். வாழ்த்துக்கள் மேஹா.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!