மெலிண்டாவுக்கு ரூ.71,100 கோடி இறுதி ஜீவனாம்சம் .... விவாகாரத்து பிறகு பில்கேட்ஸ்!
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். 2021 ஆகஸ்ட் மாதம் இவர்களது விவாகரத்து அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. இவர்களுக்கு ஜென்னர், ரோரி, போப் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

2000-ம் ஆண்டு பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை இருவரும் இணைந்து தொடங்கினர். இந்த அறக்கட்டளை சுகாதாரம், கல்வி மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற துறைகளில் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. விவாகரத்துக்குப் பிறகும் இந்த அறக்கட்டளை தொடர்ந்து இயங்கி வருகிறது.

இந்த நிலையில், விவாகரத்து ஒப்பந்தத்தின் படி மெலிண்டாவுக்கு ரூ.1,12,800 கோடி ஜீவனாம்சம் வழங்க பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டிருந்தார். அதில் ஏற்கனவே ரூ.41,700 கோடி வழங்கப்பட்ட நிலையில், தற்போது இறுதியாக ரூ.71,100 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
