பயணிகளின் கனிவான கவனத்திற்கு... மெமு ரயில் சேவை பகுதி மற்றும் முழுவதுமாக ரத்து!
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்றும் ஜூன் 18ம் தேதியும் ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் மாலை 6 மணி (66033), காட்பாடி - திருப்பதிக்கு இரவு 9.10 மணி ( 67210), , திருப்பதி - காட்பாடிக்கு இரவு 7.10 மணிக்கு (67209) இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இது தவிர, திருவண்ணாமலை - தாம்பரத்துக்கு ஜூன் 17, 19 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில் (66034) ரத்து செய்யப்பட உள்ளது.

அதே போல் ஜூன் 16, 18 ஆகிய தேதிகளில், அரக்கோணம் - காட்பாடிக்கு இயக்கப்படும் மெமு பாசஞ்சர் ரயில் (66057), சேவூர் - காட்பாடி இடையேயும், விழுப்புரம் - காட்பாடிக்கு, இரவு 7.10 மணிக்கு புறப்படும் மெமு பயணிகள் ரயில் (66026), வேலூர் - காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது.

கும்மிடிப்பூண்டி மார்க்கம்: கவரப்பேட்டை - கும்மிடிப்பூண்டி இடையே ரயில்வே பொறியியல் பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் உள்பட 19 ரயில்களின் சேவையில் ஜூன் 16, 19 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
