இன்று மாலை இயக்குநர், நடிகர் மனோபாலாவிற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி... ஒன்று கூடுமா திரையுலகம்?!

 
மனோபாலா

சமீபத்தில் மறைந்த நடிகர், இயக்குநர் மனோபாலாவுக்கு இன்று தமிழ் திரையுலகைச் சார்ந்தவர்கள் ஒன்று கூட நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இன்று மாலை  6 மணிக்கு தி.நகரில் இருக்கும் சர்.பி.டி.தியாகராஜா ஹாலில் ஒன்று கூடியிருக்கிறார்கள். நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா, டி.பி.கஜேந்திரன் ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுவதால் மொத்த திரையுலகமும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திரண்டு வர வேண்டும்.. அத்தனைப் பேரின் அன்பையும் இவர்கள் மூவருமே விருப்பு வெறுப்பில்லாமல் சம்பாதித்து இருக்கிறார்கள். ஆனால், உயிரோடு இல்லாதவர்களின் கூட்டத்திற்கு செல்லவில்லை எனில், யார் கேட்க போகிறார்கள் என்கிற நினைப்பில் முன்னணி நடிகர்களும், நடிகைகளும் இருப்பார்களா? அல்லது ஆத்மார்த்தமாக சென்று அஞ்சலி செலுத்துவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி தான். இன்று மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை என்பதால் எங்கேயும் ஷூட்டிங்கும் கிடையாது. படப்பிடிப்பைக் காரணம் காட்டியும் சாக்கு சொல்ல முடியாது. 

நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா, நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல், ரஜினி, விக்ரம், ஜெயம் ரவி, தனுஷ் என அத்தனை பேருடனும் நடித்ததும் இல்லாமல் நெருக்கமாக பழகியவர்கள் மனோபாலாவும், மயில்சாமியும். சினிமாக்காரர்களின் பாசமும், அக்கறையும் இன்று தெரிந்து விடும்.

பாரதிராஜாவின் உதவியாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இயக்குநர் , தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக தம்மை உயர்த்திக் கொண்ட மனோபாலாவின் மறைவு ஈடு செய்ய முடியாதது. நடிகர் சங்க தேர்தலில் ஆர்வமுடன் பங்கெடுத்து இருந்தாலும் இரு அணியைச் சேர்ந்தவர்களுடனும் நட்பு பாராட்டி வந்தார் மனோபாலா.

மனோபாலா
புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் உதவி இயக்குநராக அறிமுகமானவர், அதன் பின்னர் நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை உட்பட  பல படங்களில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.  கார்த்திக், சுஹாசினி நடித்த ஆகாய கங்கை படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான மனோபாலா, பிள்ளை நிலா, ஊர்க்காவலன், என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், சிறை பறவை, மல்லுவேட்டி மைனர், கருப்பு வெள்ளை, நந்தினி, நைனா உட்பட  20 படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குநராகவும் வலம் வந்துள்ளார்.

மனோபாலா

சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மனோபாலா, நட்புக்காக படத்தின் மூலம் முழு நேர நடிகராக தம்மை மாற்றிக் கொண்டார். விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், சூர்யா, மாதவன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் காமெடி கேரக்டர்களிலும்  நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், சமீபத்தில் அடுத்தடுத்து மறைந்த நடிகர் மயில்சாமி, மனோபாலா, இயக்குநர் டி.பி.கஜேந்திரன் ஆகியோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று மாலை நினைவஞ்சலி கூட்டம் நடைப்பெற்று வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web