மருத்துவ கல்லூரி அரங்கிற்கு ‘அனிதா’ பெயர்! முதல்வர் அறிவிப்பு!

 
அனிதா

தமிழகத்தில் மருத்துவ கனவுகளுடன் இருக்கும் பல மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துவ் வருகின்றனர். இதில் அரியலூரை சேர்ந்த அனிதா நீட் தேர்விற்கு எதிராக போராடி உச்சநீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அனிதா 2017, செப்டம்பர் 1ம் தேதி தற்கொலை செய்தது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அனிதா

இந்நிலையில், அரியலூரில் 22 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள  அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு  முதல்வர் ஸ்டாலின் 'அனிதா' வின் பெயரை வைக்க உத்தரவிட்டுள்ளார். அனிதா நினைவு அரங்கத்தில் ஒரே நேரத்தில்  850 பேர் வரை அமரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.அனிதாவின் மரணத்திற்கு பிறகு தமிழக அரசு  நீட் தேர்வுக்கு எதிராகவும், அதனை தடை செய்யவும்  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நீட் நுழைவுத்  தேர்வு

நீட்குற் தடை மசோதா நிறைவேற்றியும்,  தமிழகத்தில் நீட் தேர்வை தடை செய்யவும்  மத்திய அரசை தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறது.ஏற்கனவே  அனிதா நினைவாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் அனிதா பெயரில் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.இந்த கட்டத்திற்கு தற்போது அனிதாவின் பெயர் வைத்து, அனிதா மருத்துவ வளாகம் என பெயர் வைக்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web