ஜெர்மனியில் ஆண்கள் வெளிநாடு செல்லத் தடை? ... புதிய சட்டத்தால் பரபரப்பு!
ஐரோப்பிய நாடான ஜெர்மனி தனது பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 17 முதல் 45 வயது வரையிலான ஆண்களுக்குப் புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விதியின்படி, கல்வி, வேலை அல்லது நீண்ட காலப் பயணம் என எந்தக் காரணத்திற்காக வெளிநாடு சென்றாலும் இனி அரசின் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, தற்காப்பு நடவடிக்கையாக இந்த அதிரடி முடிவை ஜெர்மனி எடுத்துள்ளதாகத் தெரிகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அமைதி காலத்திலேயே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Germany has introduced new rules for men aged 17 to 45 traveling abroad. According to the Berliner Zeitung, they must now obtain permission from the Bundeswehr to stay outside the country for more than three months.
— Межа (@mezha_net) April 4, 2026
Previously, such restrictions applied only in the event of a… pic.twitter.com/lSYqe2klP7
ராணுவச் சேவையை நவீனமயமாக்கும் புதிய சட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடைமுறை மிகவும் அமைதியான முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சுமார் 1,84,000 வீரர்களைக் கொண்டுள்ள ஜெர்மனி, வரும் 2035-ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை 2,70,000 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக 2008-ம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் தங்களது ராணுவ விருப்பம் குறித்த கட்டாயக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து, அவசர காலங்களில் அவர்களை உடனடியாக ராணுவப் பணியில் ஈடுபடுத்துவதே இந்தச் சட்டத்தின் மறைமுக நோக்கம் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

வெளிநாடு செல்ல விரும்பும் ஆண்கள் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே ராணுவ மையங்களில் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுமதி இன்றி வெளிநாடு செல்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதால், வெளிநாட்டுப் பயணம் திட்டமிடுவோர் தற்போது பெரும் குழப்பத்தில் உள்ளனர். பல தசாப்தங்களாக நிலவி வந்த சுதந்திரமான பயணக் கொள்கையை மாற்றி, ஜெர்மனி மீண்டும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்வது ஐரோப்பிய அரசியலில் முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் திடீர் சட்ட மாற்றத்தால் ஜெர்மன் இளைஞர்களின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
