"ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் தேவையில்லாதது" - இயக்குநர் அமீர்!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், அலங்காநல்லூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமீர், தேர்தல் கால இலவசங்கள் குறித்துத் தனது மாற்றுக் கருத்தை முன்வைத்துள்ளார்.
"தேர்தல் நேரத்தில் வாக்குகளைக் கவர்வதற்காக அறிவிக்கப்படும் எந்தவொரு உதவித் திட்டங்களையோ அல்லது தேர்தல் அறிக்கைகளையோ நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. அது எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி" எனத் தெரிவித்தார்.

அதிமுக அறிவித்துள்ள 'ஆண்களுக்கு இலவசப் பேருந்து பயணம்' என்ற வாக்குறுதி ஏற்புடையது அல்ல என்று குறிப்பிட்ட அவர், இது தேவையற்ற ஒன்று என்றும் விமர்சித்தார்.
"பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் வழங்கப்பட்டதற்கு ஒரு வலுவான காரணம் உள்ளது. அவர்கள் குடும்பச் சுமைகளைச் சுமப்பவர்கள், பேருந்து செலவுக்கு அஞ்சி வீட்டிலேயே முடங்கிவிடக் கூடாது; அவர்களின் பொருளாதாரச் சுதந்திரம் மேம்பட வேண்டும் என்பதற்காகவே அத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதனை ஆண்களோடு ஒப்பிடுவது சரியாகாது" என்று அவர் விளக்கமளித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
