மார்ச் 28 ‘மெர்சல்’ ரீரிலீஸ்... ரசிகர்கள் கொண்டாட்டம்!

தமிழ் திரையுலகில் தனிமுத்திரை பதித்து இளையதளபதியாக கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் 2017ல் வெளியான படம் 'மெர்சல்'. பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த படங்களுள் இதுவும் ஒன்று.
விஜய்யுடன் இணைந்து சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா உட்பட பலர் நடித்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் விஜய் 'வெற்றிமாறன், வெற்றி, மாறன்' என மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து அந்த நேரத்தில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக இருந்தது. இந்நிலையில் தற்போது 'மெர்சல்' படம் மார்ச் 28ம் தேதி ரம்ஜான் பண்டிகை விடுமுறையை ஒட்டி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!