இந்தியா வந்தடைந்தார் மெஸ்ஸி... கொல்கத்தாவில் உற்சாக வரவேற்பு... பிரதமருடன் சந்திப்பு.. ரசிகர்களுடன் செல்ஃபி - முழு பயண திட்டம் இது தான்!
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்ஸி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இன்று (டிசம்பர் 13) கொல்கத்தாவுக்கு வந்தடைந்த அவருக்குக் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸியின் வருகையை ஒட்டி கொல்கத்தா நகரம் முழுவதும் மெஸ்ஸி ஜுரம் ஆட்டுவிக்கிறது. பல இடங்களில் அவரது பெரிய அளவிலான கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகள் காணப்படுகின்றன.
லேக்டவுன் பகுதியில் உள்ள ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில், கையில் உலகக் கோப்பையைப் பிடித்திருப்பது போன்ற 70 அடி உயர மெஸ்ஸியின் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். 78,000 இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் மெஸ்ஸியின் வருகையையொட்டி பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ரூ.7 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி, முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
மெஸ்ஸியின் தீவிர ரசிகரான ஷிப் ஷங்கர் பத்ரா (56) என்பவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் தனது வீட்டை அர்ஜென்டினா கொடி நிறத்தில் வர்ணம் தீட்டி அழகு பார்த்தவர். தனது டீ கடையை அர்ஜென்டினா ரசிகர் கிளப் என்ற பெயரில் மாற்றியவர். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், ரூ.7 ஆயிரத்துக்கு இரண்டு டிக்கெட் வாங்கியிருந்த பத்ராவுக்கு, இப்போது மெஸ்ஸியை நேரில் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த 3 நாள் இந்தியப் பயணத்தில், மெஸ்ஸி மொத்தம் 72 மணி நேரம் செலவிடுகிறார். அவரது பயண விவரங்கள்: இன்று கொல்கத்தா பயணத்தை முடித்துக் கொண்டு பிற்பகல் ஐதராபாத்துக்குச் செல்கிறார். அங்கு இன்று இரவு காட்சி கால்பந்து போட்டியில் ஆடுகிறார்.
நாளை (டிசம்பர் 14) மும்பைக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நாளை மறுநாள் டிசம்பர் 15: டெல்லிக்குச் செல்லும் மெஸ்ஸி, அங்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாட இருக்கிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
