மெஸ்ஸி இந்தியா வருகை... ‘G.O.A.T. India Tour’... ரசிகர்கள் உற்சாகம் !

 
மெஸ்ஸி
 

லியோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி இந்தியாவில் ‘G.O.A.T. India Tour’ சுற்றுப்பயணம் மேற்கொள்வது ரசிகர்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 13 முதல் 15 வரை தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் மெஸ்ஸி மற்றும் அவரது அணியினர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

மெஸ்ஸியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் டிக்கெட்டுகள் ரூ.4,500 முதல் தொடங்குகின்றன. மும்பை நிகழ்ச்சிக்கான கட்டணம் ரூ.8,250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மியாமியில் இருந்து புறப்படும் மெஸ்ஸி, டிச.13 அதிகாலை கொல்கத்தா வந்து ரசிகர்களைச் சந்திக்கிறார். பின்னர் சௌரவ் கங்குலி மற்றும் முதல்வர் மமதா பானர்ஜியை சந்தித்த பின் ஹைதராபாத் செல்கிறார்.

அன்றைய மாலை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அணியுடன் நட்புறவு போட்டியில் களமிறங்குகிறார். தொடர்ந்து டிச.14 அன்று மும்பை வான்கடேவில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். டிச.15 அன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ள தகவல், இந்தியா முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!