இயல்பை விட 6% கூடுதல் மழை... வடகிழக்கு பருவ மழை குறித்து வானிலை ஆய்வு மையம்!

 
மழை
 

தென்மேற்கு வங்கக்கடல் மேலாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் பாதிப்பால் தமிழகத்தில் அடுத்த சில நாட்கள் இடியுடன் கூடிய மழை சாத்தியம் உள்ளது. சில மாவட்டங்களில் மட்டும் லேசான பனிமூட்டமும் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் வானிலை மாற்றம் படுத்தும் நிலையில், புதுவை–காரைக்காலும் ஓரளவு மழையை சந்திக்க உள்ளது.

 மழை
இன்று மற்றும் நாளை தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. ஏனைய இடங்களில் வறண்ட வானிலை நீடிக்கும். அதிகாலையில் சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் தெரியும். அடுத்த இரண்டு நாட்களும் இதே மாதிரி தான். தெற்கில் மட்டும் பனிக்காற்றுடன் சீரான மழை வாய்ப்பு இருக்கும்; வடதமிழகம் பெரும்பாலும் வறண்டதே.
 மழை கனமழை
15ம் தேதி கடலோர மாவட்டங்கள் – செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் பகுதிகள் – லேசான மழையைப் பெறக்கூடும். உள் மாவட்டங்கள் வறண்ட நிலை. 16ம் தேதி கடலோரம் முழுவதும், உள் தமிழகம் சில பகுதிகள், புதுவை–காரைக்காலில் மிதமான மழை சாத்தியம். 17ம் தேதி தமிழகமெங்கும் சிதறிய மழை பெய்யக்கூடும் என்று கணிப்பு. வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பை விட 6% அதிகம் பொழிந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!