பிப்ரவரி 9 முதல் மெட்ரோ கட்டணம் உயர்வு… !

 
மெட்ரோ ரயில்
 

பெங்களூர் மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூரத்தைப் பொறுத்து ரூ.1 முதல் ரூ.5 வரை கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. இது சுமார் 4 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்வாக இருக்கும். மெட்ரோ ரயில்வே சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கட்டண நிர்ணயக் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. இதை பெங்களூர் மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில்

ஏழரை ஆண்டுகளுக்கு பிறகு கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். கட்டண மண்டலங்கள் 29 லிருந்து 10 ஆக குறைக்கப்பட்டதால் சராசரியாக 51.55 சதவீத உயர்வு ஏற்பட்டதாக விளக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் திடீர் கட்டண உயர்வுகளை தவிர்க்க ஆண்டுதோறும் கட்டணத்தை திருத்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டணம் 2026 பிப்ரவரி 9 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ

அதே நேரத்தில் பயணிகளுக்கான சலுகைகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு மற்றும் என்சிஎம்சி பயனர்களுக்கு பணி நேரங்களில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். கூட்டம் குறைவான நேரங்களில் மற்றும் ஞாயிறு, தேசிய விடுமுறை நாட்களில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். சுற்றுலா அட்டைகள் மற்றும் குழு டிக்கெட்டுகளுக்கு 5 சதவீத கட்டண உயர்வு மட்டும் அமலாகும். சேவையின் நம்பகத்தன்மை மற்றும் நிதிநிலையை பாதுகாக்க இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!