மெட்ரோ தூண் இடிந்து விபத்து: ஒருவர் பலி!
முலுண்ட் பகுதியில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் இருந்து கனரக தூண் இடிந்து விழுந்ததில் பரிதாப விபத்து ஏற்பட்டது. திடீரென கீழே விழுந்த தூண் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்ததும் அங்கு பதற்றம் நிலவியது.
தூண் கீழே விழுந்ததில் சாலையில் சென்ற ஆட்டோவும் காரும் நொறுங்கின. ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் கடுமையாக சிக்கிய நிலையில் மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இணைந்து காயமடைந்தவர்களை வெளியே கொண்டு வந்தனர்.
படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 4 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
