இன்று சென்னையில் போரூர் வடபழனி இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!
சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக போரூர் – வடபழனி இடையிலான 7 கி.மீ. வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே பூந்தமல்லி – போரூர் இடையிலான 10 கி.மீ. சோதனை ஓட்டம் முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக இந்த வழித்தடத்தில் மெட்ரோ இயக்கப்படுகிறது. இன்று காலை சுமார் 11 மணியளவில் சோதனை ஓட்டம் நடைபெறும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வழித்தடம் சென்னையின் முதல் இரட்டை அடுக்கு மெட்ரோ மேம்பாலமாக அமைந்துள்ளது. கீழ் அடுக்கில் வாகனங்கள் செல்லவும், மேல் அடுக்கில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த சில நாட்களாக மின்மயமாக்கல் மற்றும் சிக்னல் சோதனைகள் தீவிரமாக நடைபெற்றன. நேற்று ஒருங்கிணைந்த கணினி சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்தன.

இந்த வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்தால் ஆற்காடு சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பூந்தமல்லி, போரூர் பகுதிகளில் இருந்து வடபழனி வழியாக நகரின் மையப்பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இது பெரிய வசதியாக இருக்கும். மெட்ரோ சேவையால் பயண நேரமும், மன அழுத்தமும் குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
