ஜனவரி 15 ம் தேதி வடபழனி முதல் பூவிருந்தவல்லி வரை மெட்ரோ சோதனை ஓட்டம்!
சென்னை வடபழனி முதல் பூவிருந்தவல்லி வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஜனவரி 15-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ பணிகளுக்காக 57 கிரேன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பாதை டபுள் டெக்கர் வடிவில் அமைக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை நாளுக்கு நாள் மக்கள் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பெருநகரமாக சென்னை வளர்ந்து விட்டது. கல்வி, வேலை, மருத்துவம், வணிகம் போன்ற காரணங்களால் பலரும் சென்னையை விட்டு செல்ல முடியாத சூழல் உள்ளது. இதனால் போக்குவரத்து சிக்கலும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மெட்ரோ போன்ற உள்கட்டமைப்பு திட்டங்கள் மக்களுக்கு பெரிய நிம்மதியை தரும். படிப்படியாக இத்தகைய வசதிகள் அதிகரித்தால் பொதுமக்களின் தினசரி சிரமங்கள் குறையும். நகர வளர்ச்சிக்கு இது அவசியம் என்கிற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
