இன்று நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

 
மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ் சேவை: மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

இன்று மார்ச் 19ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தமிழ் சினிமாவில் பணியாற்றும் லைட்மேன்களுக்கு உதவ நிதி திரட்டுவதற்காக, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  இத்தகவலை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின்(பெஃப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டையும் ஏ.ஆர்.ரஹ்மான் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

சமீபத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் லைட்மேன் குமார் என்கிற லைட்மேன், மேலே உயரத்தில் ஏறி படப்பிடிப்புக்கான லைட் செட் செய்த போது தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டினர். இதனையடுத்து ஆர்.கே.செல்வமணி கோரிக்கையை ஏற்று லைட்மேன்களுக்கு உதவ நிதி திரட்டுவதற்காக ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியையொட்டி இன்று நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டரங்கில் இன்று இரவு 7  மணி முதல் 11.30 மணி வரை நிகழ்ச்சி நடப்பதால் மெட்ரோ நிர்வாகம், பார்வையாளர்கள் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்புவதற்கு வசதியாக இந்த  நடவடிக்கை எடுத்துள்ளது. நிகழ்ச்சியைக் காண வருவோருக்கான மெட்ரோ ரயில் சேவை 11 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web