மின்சாரம் இன்றி நடுவழியில் நின்றுவிட்ட மெட்ரோ ரயில் ... பயணிகள் கடும் அவதி!
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால், சென்னை நகரம் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழையில் நனைந்து வருகிறது. திங்கட்கிழமை அதிகாலையிலும் பலத்த மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, சாலைகள் பல இடங்களில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வேலைக்குச் செல்லும் மக்கள் பேருந்துகளை விட மெட்ரோவை அதிகம் பயன்படுத்தினர்.
VIDEO | A Chennai Metro train came to an abrupt halt likely due to power failure inside the tunnel between Central and High Court stations, leaving passengers stranded inside. More details are awaited.
— Press Trust of India (@PTI_News) December 2, 2025
(Source: Third Party)
(Full video available on PTI Videos -… pic.twitter.com/W5qHtKm8u8
இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் நோக்கி வந்த மெட்ரோ ரயில், உயர்நீதிமன்ற–சென்ட்ரல் இடையே உள்ள சுரங்கப்பாதையில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நின்றது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ரயில் சுரங்கத்துக்குள் நின்றுவிட்டது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் பதற்றமும் அவதியும் அடைந்தனர்.
தொடர்ந்து தொழில்நுட்பக் குழு உடனடியாக இறங்கியதில் கோளாறு சரிசெய்யப்பட்டு, காலை 6.20 மணிக்கு மெட்ரோ சேவை மீண்டும் வழக்கம்போல இயக்கப்பட்டது. சில நிமிடங்களே சேவை பாதிக்கப்பட்டதாகவும், தற்போது அனைத்து ரயில்களும் இயல்புநிலைக்கு வந்துள்ளதாகவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
