அடிதூள்!! இன்று முதல் வாட்ஸ் அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்!!

 
வாட்ஸ் அப், மெட்ரோ

சென்னையின் அனைத்து பகுதிகளும் மெட்ரோவால் இணைக்கப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. கட்டணம் அதிகம், ரயில் சேவை குறைவு என பல புகார்கள் எழுந்தன. தற்போது மெட்ரோவில் தினசரி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி  மெட்ரோ ரயிலில் அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் என தினமும் 2லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர்.  பயணிகளின் வசதிக்காகவும், தொழில் நுப்ட அடிப்படையில் மேம்பாடு செய்யவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகிறது

வாட்ஸ் அப், மெட்ரோ

.அதன்படி பயணிகள் அட்டை திட்டம் மூலம் டிக்கெட் பெற்றால் 20 சதவிகிதம் சலுகை, ரூ.2,500-ல் மாதப் பயணம், 20க்கும் மேற்பட்டோர் பயணித்தால் குரூப் டிக்கெட் எனப் பல்வேறு சலுகைகளை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.இந்நிலையில், மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதி சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று மே 17ம் தேதி புதன்கிழமை அறிமுகம் செய்கிறது.

மெட்ரோ  வாட்ஸ் அப்

வீட்டில் இருந்தபடியே அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே மெட்ரோ நிர்வாகம் கொடுக்கவுள்ள போன் நம்பருக்கு புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை அனுப்பி, யுபிஐ மூலம் கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.  இதன் பிறகு அதிகாரப்பூர்வ  வாட்ஸ்அப் எண்ணிற்கு  வரும் 'கியூஆர் கோடை' பயணத்தின் போது ஸ்கேன் செய்து பயணம்  செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோவின் இந்த அறிவிப்பால் ரயில் பயணிகள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web