பொங்கல் விடுமுறை நாட்களில் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் சேவை...!
பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக விடுமுறை நாள்களில் மெட்ரோ சேவை ஞாயிறு அட்டவணையில் இயங்கும் நிலையில், பொங்கல் விடுமுறையிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.
𝐎𝐧 𝟏𝟓𝐭𝐡, 𝟏𝟔𝐭𝐡 𝐚𝐧𝐝 𝟏𝟕𝐭𝐡 𝐉𝐚𝐧𝐮𝐚𝐫𝐲 2026, 𝐌𝐞𝐭𝐫𝐨 𝐓𝐫𝐚𝐢𝐧𝐬 𝐰𝐢𝐥𝐥 𝐨𝐩𝐞𝐫𝐚𝐭𝐞 𝐚𝐬 𝐩𝐞𝐫 𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝐓𝐢𝐦𝐞 𝐓𝐚𝐛𝐥𝐞
— Chennai Metro Rail (@cmrlofficial) January 14, 2026
On account of Pongal Holidays, Metro Trains will operate as per Sunday Timetable on January 15, 16 and 17, 2026.
1. Chennai…
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்த மூன்று நாள்களிலும் மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் சேவை வழங்கப்படும். பொங்கல் விடுமுறையில் பயணிகள் வசதிக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
