இன்று முழுவதும் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இன்று முழுவதும் அரசு விடுமுறை என்பதால் மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதுவாக அரசு விடுமுறை நாட்களில் அலுவலகம் செல்வோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில்களின் இடைவெளியில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை ஒவ்வொரு 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை: ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை: ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

பண்டிகைக் காலத்தைக் கொண்டாட மெரினா கடற்கரை, வணிக வளாகங்கள் (Malls) மற்றும் தேவாலயங்களுக்குச் செல்பவர்கள் இந்த நேர மாற்றத்தைக் கவனித்தில் கொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பயணச் சீட்டு வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும் 'மெட்ரோ ரயில் மொபைல் ஆப்' அல்லது வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
