எம்.ஜி.ஆர் நினைவு நாள்... மெரினாவில் குவியும் தொண்டர்கள்... முக்கிய தலைவர்கள் மரியாதை!

 
எடப்பாடி

இன்று, அதிமுக நிறுவனத் தலைவர், ஏழைகளின் இதயக்கனி என்று போற்றப்படும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 38வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து எம்.ஜி.ஆரின் உண்மையான விசுவாசிகள் அதிகாலை முதலே மெரினாவில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.

எடப்பாடி

இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். அதனைத் தொடர்ந்து நினைவிட நுழைவு வாயிலில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

எடப்பாடி

அதே போன்று அதிமுகவில் இருந்து பிரிந்து, தனிக்கட்சி தொடங்கியவர்கள் என முக்கிய பிரமுகர்கள் பலரும் இன்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!