நடுவானில் களேபரம்... குழந்தையின் தங்க செயினை திருடியதாக விமான பணிப்பெண் மீது குற்றச்சாட்டு!

 
விமானம் விமான நிலையம்
நடுவானில் விமானம் பறந்துக் கொண்டிருந்த போது, குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க செயினை விமான பணிப்பெண் திருடிவிட்டதாக பெண் பயணி குற்றஞ்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து இண்டிகோ விமானம் ஒன்று, நேற்று முன் தினம் கர்நாடகாவின் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் பிரியங்கா என்ற பெண் பயணி தனது 2 குழந்தைகளுடன் பயணத்துள்ளார்.

இண்டிகோ

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பிரியங்காவின் குழந்தையை விமான பணிப்பெண் அதிதி அஸ்வினி விமான கழிவறைக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர், குழந்தையை பிரியங்காவிடம் ஒப்படைத்துள்ளார். அப்போது, குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயின் மாயமாகியுள்ளது.

பெங்களூருவில் விமானம் தரையிறங்கிய பின்னரே குழந்தையின் கழுத்தில் இருந்த செயின் மாயமானது குறித்து பிரியங்காவுக்கு தெரியவந்தது. இதையடுத்து, விமானத்தின் பணிப்பெண் அதிதி அஸ்வினி தான் குழந்தையின் செயினை திருடி விட்டதாக பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

 இண்டிகோ விமானம்

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான விவரங்களை அறிந்ததாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web